சமையல் குறிப்புகள்

அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு

தேவையான பொருட்கள் :

  • வாழைப்பூ – ஒரு கப்,
  • புளிக்கரைசல் – ஒரு கப்,
  • சின்ன வெங்காயம் – 5,
  • வெல்லம், கடுகு, சீரகம் – தலா அரை டீ ஸ்பூன்,
  • வெந்தயம் – கால் டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிதளவு,
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கேற்ப.




மசாலா தயாரிக்க:

  • தேங்காய்த் துருவல் – அரை கப்,
  • தனியா – ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் – 4,
  • சின்ன வெங்காயம் – 5,
  • பூண்டு – 5 பல்,
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்,
  • தக்காளி – ஒன்று

செய்முறை:

  • சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.
  • அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
  • இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
  • சூடான சாதத்துடன் பரிமாறவும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker