சமையல் குறிப்புகள்
நார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்
தேவையான பொருட்கள்
- பாசிபருப்பு – 200 கிராம்
- பச்சை மிளகாய் – 4
- பேக்கிங் சோடா
- எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- குடைமிளகாய் – 1
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – சுவைக்க
செய்முறை
- பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.
- அதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
- இரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
- ஆரோக்கியமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.