கல்லீரலின் பாதுகாப்பு கவசம் யோகமுத்ரா
நமது உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தான் யோகாசனங்களில் ஒன்றான யோகமுத்ரா என்ற ஆசனமாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இதனை காலை-மாலை பயிற்சி செய்து, நமது லிவருக்கு கவசமாக, பாதுகாப்பாக இதனைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
யோகமுத்ரா செய்முறை
விரிப்பில் முதலில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து வலதுகை மணிக்கட்டை இடது கையால் பற்றி பிடிக்கவும்.
மூச்சை வெளிவிட்டுக் கொண்டு மெதுவாக முன்னால் குனிந்து நெற்றி தரையில் படும்படி வைக்கவும். சாதாரண மூச்சில் கண்களை மூடி 30 விநாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும். ஒரு நிமிடம் ஒய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு
பத்மாசனம் போட முடியாதவர்கள், சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து குனிந்து பயிற்சி செய்யவும். தொடர்ந்து இரு மாதங்கள் பயிற்சி செய்தால் பின் பத்மாசனத்தில் எளிதாக பயிலலாம். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலியால் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், அல்லது முதுகெலும்பு பாதிப்பு உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தை களுக்கு இதனை காலை எழுந்தவுடன் விளையாட்டாக பயிற்றுவியுங்கள. சிறு வயதிலேயே பயின்றால் நல்ல பலனுண்டு.எவ்வளவு வயதானாலும் லிவர் மிகச்சிறப்பாக இயங்கும்.
இந்த யோக முத்ராவினால் ஏற்படும் மற்ற பலன்கள் இதோ
* கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்படாமல் நன்கு இயங்கும்.
* மலச்சிக்கல், அஜீர ணம் நீக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்குகின்றது.
* தாது பலமின்மையை நீக்குகின்றது.
* மன ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.
* இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும்
* உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பண்பு ஏற்படும். கோபம், படபடப்பு நீங்கும்.
* பல மணிநேரம் கம்யூட்டரில் வேலை செய்வதாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் ஏற்படும் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி நீங்கும்.