சமையல் குறிப்புகள்
சூப்பரான ஸ்நாக்ஸ் சமோசா சாட்
தேவையான பொருட்கள்
- சமோசா – 2
- மொருமொரு அப்பளம் – 6
- தயிர் – 3 மேஜைக்கரண்டி
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- புதினா சட்னி – 2 தேக்கரண்டி
- புளி சட்னி – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
- ஓம பொடி – 1 கப்
- உப்பு – சுவைக்க
செய்முறை
- தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
- அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
- தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
- நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.
- அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
- அதன் மேல் ஓம பொடியை தூவி மேலும் அலங்கரிக்கவும்.
- இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.
- சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.