ஆரோக்கியம்மருத்துவம்

அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

சிலருக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். பசியே இராது. இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்கள் உணவு அதிகம் உண்பவர்களாக இருப்பார்கள். இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பு. உண்மையில் இவர்களுக்கு மருத்துவ உதவி மிக அவசியம். இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ (அ) ஒருவித வெட்கத்தோடோ இருப்பார்கள். வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம்.



ஒருவருக்கு இப்படி அடிக்கடி உண்ணும் பழக்கம் இருப்பதனை எப்படி அறியலாம்?

* மிகவும் அதிகமான உணவினை இரண்டு மணி நேரத்திற்குள் உண்பார்கள்.
* உண்பதனை கட்டுப்படுத்தவே முடியாது.
* வயிறு நிரம்பி இருக்கும் போதும் உண்பார்கள்.
* மிக மிக வேகமாக உண்பார்கள்.
* தனிமையில் உண்பதனையே விரும்புவார்கள்.

இந்த அறிகுறிகள் ஆரம்பித்த உடனேயே மருத்துவரை அணுகுவதே மிகவும் நல்லது. மனச்சோர்வினால் அதிகம் கட்டுப்பாடில்லாத உண்ணும் பழக்கம் ஏற்படுவதுண்டு. மருத்துவர், பாதிப்பு உடையவர்களுக்கு பரம்பரை காரணம் இருக்கின்றதா என்று ஆய்ந்து அறிவார்.

* இப்படி அதிகம் உண்ணும் ப-ழக்கம் உடையவர்களின் வாழ்க்கை தரம் அதிகம் தாழ்ந்து தான் இருக்கும்.

* அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.



* சமுதாயத்தில் இவர்கள் ஒதுங்கியே இருப்பார்கள்.

* நோய் பாதிப்புகள் இருக்கும்.

* எடை அதிகம் இருக்கும்.

இப்பழக்கத்தினை மாற்ற அவரவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

• ‘டயட்டில் இருக்கிறேன். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்’ என்ற பெயரில் சாப்பாட்டில் அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நிறுத்தி விடுங்கள். இது உணவின் மீது அதிக ஆசையினை ஏற்படுத்தி விடுகின்றது.

• முறையான நேரத்தில் சரியான உணவு உண்பதனை கண்டிப்பாய் கடைபிடிக்க வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராய் இருக்க உதவும். சோர்வு இருக்காது.

• உண்ணும்பொழுது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக்கொண்டோ உண்ணாதீர்கள். பசி எடுக்கும் பொழுது தரமான உணவினை அளவோடு முழு கவனத்தோடு உண்ணுங்கள்.

• தேவையான அளவு நீர் குடியுங்கள்.

• யோகா பயிற்சி மனக் கட்டுப்பாட்டிற்கு உதவும்.

• உணவில் நார்சத்து இருக்க வேண்டும்.

• சமையலறையிலோ, படுக்கை அறையிலோ நொறுக்கு தீனிகளை வைக்காதீர்கள். சமைக்கும் உணவினையும் அந்த நேரத்திற்கு தேவையான அளவே சமையுங்கள்.

• உடற்பயிற்சியினை கண்டிப்பாய் செய்ய வேண்டும்.

• காலை உணவினை அவசியம் உட்கொள்ளுங்கள். இல்லையெனில் அன்றைய நாள் முழுவதும் தவறான முறையிலேயே உண்பீர்கள்.

• 8 மணி நேர தூக்கம் தெளிவாய் இயங்க உதவும்.

• உங்கள் உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் பொழுதெல்லாம் எழுதி வையுங்கள். சுய ஆய்வு செய்ய இது பெரிதும் உதவும்.

• புரத அளவு தேவையான அளவு உணவில் இருக்க வேண்டும்.

• திட்டமிட்டு உணவினை உட்கொள்ளுங்கள். இப்படி நாம் அனைவருமே செய்யலாம். சிறந்த ஆரோக்கியத்தினை தரும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker