உறவுகள்புதியவை

திருமணத்திற்கு முன் உங்கள் துணையிடம் இந்த 5 விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கோங்க..!

திருமணத்திற்கு முன் உங்கள் துணையிடம் இந்த 5 விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கோங்க..!

திருமணத்திற்கு முன்பு அல்லது காதலை சொல்வதற்கு முன்பு உங்கள் துணையிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கலந்து பேசிக்கொள்வது நல்லது. இந்த ஐந்தும் உங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்துவதுடன் நிறைய பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது. எனவே, இந்த 5 விஷயங்களை முன்பே பேசிக்கொள்ளுங்கள்.

உங்களின் வாழ்க்கை முறை பற்றி பேசுங்கள்

பெரும்பாலும் அனைவரும் தற்பொழுது நம் வாழும் வாழ்க்கை முறையில் இருந்து மாறி இன்னும் நன்றாக ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். அதிலும் திருமணம் என்றால் ஆசையும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருக்கும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்புகளும் மாறும். நீங்கள் ஒரே உறவில் இருக்கப் போவதால் உங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் அல்லது வாழ்க்கை முறை பிடித்திருக்கிறதா என்பதை பேசி முன்பே புரிந்து கொள்ளுங்கள்.

கனவு

வேலை பற்றியும் உங்கள் கனவுகள் பற்றியும் பேசுவது அவசியமானது. இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதேபோல் வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது பெரும்பாலும் அனைவரின் வேலை மற்றும் கனவுகள் பாதிக்கப்படுகிறது.

ஆனால், நீங்கள் முன்பே இதைப்பற்றி பேசிக்கொண்டு உங்களின் கனவுகளையும், நீங்கள் செய்யும் வேலையையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது‌. இதனால் நீங்களும் உங்களின் இலக்கை நோக்கி உங்கள் துணையின் கூடுதல் ஆதரவோடு பயணிக்கலாம்.

எதிர்பார்ப்புகள் பற்றி பேச வேண்டியது அவசியம்

நெருக்கம் மற்றும் உறவு எதிர்பார்ப்புகள் பற்றி பேச வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு நெருக்கமாக உணர்கிறீர்கள், உங்கள் திருமணத்தை எப்படி கற்பனை செய்கிறீர்கள். இருவரும் எப்படி ஒன்றாக நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது முக்கியம். உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிருங்கள்.

நிதி நிலைமை

திருமணத்திற்கு முன், உங்கள் நிதி நிலைமை குறித்து உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவது அவசியம். வருமானம், கடன், சேமிப்பு மற்றும் செலவு செய்யும் பழக்கம் பற்றி நேர்மையான விவாதங்களை நடத்துவது முக்கியம். மேலும், நீண்ட கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதித் திட்டமிடல் பற்றி பேசவும், இதில் நீங்கள் ஜோடியாகச் சேர்ந்து செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள் என்பது உட்பட. குடும்பத் திட்டமிடல் திருமணத்திற்கு முன், குடும்பம் தொடங்குவது குறித்து ஒருவருக்கொருவர் கருத்துகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

குடும்பம் திட்டமிடல்

குழந்தைகளின் எண்ணிக்கை, நீங்கள் எப்போது பெற்றோராக விரும்புகிறீர்கள் போன்றவற்றைப் பற்றி விவாதிப்பது இதில் அடங்கும். வீட்டுப் பொறுப்புகளை நிர்வகித்தல் மற்றும் வேலை செய்யும் போது குழந்தைகளை கவனித்துக்கொள்வது, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக சேமிப்பது, எதிர்கால திட்டங்களை ஒன்றாக உருவாக்குவது மற்றும் குடும்ப வாழ்க்கையில் சமநிலையை உருவாக்குவது பற்றி முன்பே பேசிக் கொள்வது மிக முக்கியம்.

மேலும் ஒருவரை திருமணத்திற்குப் பிறகு அல்லது ஒரு காதல் உறவுக்கு சம்மதம் சொன்ன பிறகு மாற்றி விடலாம் என்ற எண்ணம் கொள்ளாதீர்கள். அதேபோல் ஒருவரை ஏமாற்றி அல்லது பொய்கள் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் வாழப்போவதால் எப்படியும் அந்த உண்மை தெரிந்த பிறகு நிறைய பிரச்சனைகள் வந்து உங்களுக்கு தான் அது மன அழுத்தத்தை தர போகிறது. அதனால் இதுபோன்ற விஷயங்களை முன்பே பேசிக் கொள்வது நல் வாழ்விற்கு வழி வகுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker