சமையல் குறிப்புகள்
வீட்டில் பாஸந்தி செய்வது எப்படி?
தேவையா பொருட்கள் :
- பால் – அரை லிட்டர்
- கண்டென்ஸ்டு மில்க் – கால் கப்
- சர்க்கரை – கால் கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- பாதாம் – 6 (நறுக்கவும்)
- முந்திரி பருப்பு – 10 (நறுக்கவும்)
- பிஸ்தா – 6 (நறுக்கவும்)
- குங்குமப்பூ – 5 பிசிறுகள்
செய்முறை:
- பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
- அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
- அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
- சூப்பரான பாஸந்தி ரெடி.