சமையல் குறிப்புகள்
சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
- முட்டை – 4
- வெண்டைக்காய் – 100 கிராம்
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு – சுவைக்கு
செய்முறை:
- வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெண்டைக்காயின் பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் தனியாக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன், முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
- முட்டையும், வெண்டைக்காயும் வெந்ததும் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- சுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெடி..!