ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?
சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள். இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போதுஃப்ளைட் மோட் ஆஃசனில் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.
குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வழிகள்:
1 பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.
2. ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள்.
3. குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள்.
4. குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள்.
5. ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள்.
6. விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
7. குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!