சமையல் குறிப்புகள்
ருசியான சிக்கன் ப்ரோக்கோலி வறுவல்
தேவையான பெருட்கள்:
- ப்ரோக்கோலி – ஒரு கப்
- இஞ்சி – ஒரு டீஸ்பூன்
- சிக்கன் – கால் கிலோ
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
- கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும்.
- அத்துடன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், எலுமிச்சை சாறு, கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
- பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
- மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- அடுத்து அதில் ப்ரோக்கோலியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
- அடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிப்போட்டு வேகவிடவும்.
- ப்ரோக்கோலி பாதியளவு வெந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறிவிடவும்.
- அத்துடன், ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சேர்த்து கிளறி வேகவிடவும்.
- இறுதியாக, மிளகுத்தூள் தூவி 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- சூப்பரான சிக்கன் ப்ரோக்கோலி ரெடி..