சமையல் குறிப்புகள்

முட்டை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக்

தேவையான பொருட்கள் :

  • மைதா – 150 கிராம்
  • சர்க்கரை – 300 கிராம்
  • வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
  • உப்பில்லா வெண்ணெய் – 75 கிராம்
  • சூரியகாந்தி எண்ணெய் – 25 மில்லி
  • பால் – அரை கப்
  • வினிகர் – 2 டீஸ்பூன்
  • பேரீச்சை – 10
  • டூட்டி ஃப்ரூட்டி – ஒரு கைப்பிடி அளவு
  • முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை – ஒரு கைப்பிடியளவு
  • கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
  • கிராம்பு – ஒன்று
  • பட்டை – சிறிய துண்டு
  • ஏலக்காய் – 2
  • ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை



செய்முறை:

  • 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
  • கிராம்பு, பட்டை, ஏலக்காயை தட்டி வைக்கவும்.
  • பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.
  • வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும்.
  • இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில் கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
  • மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.
  • இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.
  • ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் – உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
  • இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.
  • இப்போது சூப்பரான முட்டை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக் ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker