சமையல் குறிப்புகள்
இனிப்பு, புளிப்பு கலந்த மூவர்ண சாலட்
தேவையான பொருட்கள்
ட்ரெஸ்ஸிக்
- வினிகர் – 1/3 கப்
- தேன்/சர்க்கரை – 3 மேஜைக்கரண்டி
- சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- பூண்டு – 2
- மிளகாய் – 2
சாலட்டிற்கு
- பச்சை பப்பாளி – 1 நடுத்தரமாக
- பெரிய கேரட் – 1
- வெள்ளரிக்காய் – 2,
- புதினா – 1/3 கப்
- வறுத்த நிலக்கடலை – 4 மேஜைக்கரண்டி
செய்முறை:
- பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கேரட், வெள்ளரிக்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ட்ரெஸ்ஸிங்க்கு தேவையான பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- பச்சை பப்பாளியின் தோலை சீவி நூல் போன்று நீளநீளமாக வெட்டிக் கொள்ளவும்.
- பெரிய பவுலில் நறுக்கிய பச்சை பப்பாளி, கேரட். வெள்ளரி, புதினா மற்றும் நிலக்கடலையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
- இந்த சாட்டின் மேல் தயார் செய்து வைத்த ட்ரெஸ்ஸிங்கை ஊற்றி நன்றாக கலந்து உடனடியாக பரிமாறிலாம்.
- சூப்பரான மூவர்ண சாலட் தயார்.