ஆரோக்கியம்மருத்துவம்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஒயிட் சாக்லேட்

சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா?



வெள்ளை நிற சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது. ஆகவே வெள்ளை நிற சாக்லேட்டுகள் சற்று வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். டார்க் சாக்லேட்டிற்கும், வெள்ளை சாக்லேட்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளேவர் தான். அதற்காக வெள்ளை நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான். இங்கு வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வெள்ளை சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அவசியமானது. அதோடு கால்சியம் இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும் ஆதரவாக இருக்கும்.

வெள்ளை சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கொக்கோ வெண்ணெய் கொக்கோ தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த தாவரத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



வெள்ளை சாக்லேட்டுகளில் பல உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான லினோலியிக் அமிலம் உள்ளது. லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். அதாவது இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.

வெள்ளை சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.

சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.



ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள டோபமைன் என்ற பொருள் மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியாக்கி இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker