சமையல் குறிப்புகள்

சாக்லேட் குஜியா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க:

  • மைதா – 2 கப்
  • நெய் – 1/4 கப்
  • தண்ணீர் – 1/2 கப்

ஸ்டஃப் செய்ய:

  • டார்க் சாக்லேட் – 1 கப்
  • உலர்ந்த தேங்காய் – 1/4 கப்
  • ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
  • பாதாம் – 1/2 கப்
  • வெல்லம் – 1 மேஜைக்கரண்டி




செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
  • டார்க் சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.
  • ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.
  • சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
  • அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
  • அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
  • சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker