சமையல் குறிப்புகள்
சாக்லேட் குஜியா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க:
- மைதா – 2 கப்
- நெய் – 1/4 கப்
- தண்ணீர் – 1/2 கப்
ஸ்டஃப் செய்ய:
- டார்க் சாக்லேட் – 1 கப்
- உலர்ந்த தேங்காய் – 1/4 கப்
- ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
- பாதாம் – 1/2 கப்
- வெல்லம் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
- டார்க் சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.
- ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.
- சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
- அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
- அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
- சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.