சமையல் குறிப்புகள்

பர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ் – 200 கிராம்
  • பூண்டு – 10
  • பெரிய வெங்காயம் – 2
  • முட்டைக்கோஸ் – ஒரு கப்
  • கேரட் – ஒரு கப்
  • எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
  • புளி கரைசல் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கேசரி பவுடர் – ஒரு சிட்டகை
  • காய்ந்த மிளகாய் துகள் – தேவையான அளவு
  • தட்டை – 2
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

 


செய்முறை:

  • கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  • முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  • அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • சுவையான அத்தோ ரெடி..!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker