சமையல் குறிப்புகள்
சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :
- சிவப்பு அரிசி – அரை கப்,
- உளுந்து – கால் கப்,
- வெங்காயம், தக்காளி – தலா 1
- முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி – தலா ஒரு கப்,
- புதினா இலைகள் – சிறிதளவு,
- உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
- தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.
- இந்த ரவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஆறியதும் நன்கு மிளகுத்தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
- சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப் ரெடி.