தாய்மை-குழந்தை பராமரிப்பு

முதல் பிரசவம் Vs இரண்டாவது பிரசவம்

இரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணர வேண்டியது அவசியம்.

முதல் பிரசவம் Vs இரண்டாவது பிரசவம்

முதல் பிரசவம் என்பது உங்களுக்கு பலவித புதிய அனுபவத்தை கற்றுத்தருவது போல இரண்டாவது பிரசவம் என்பதும் பல்வேறு நிலைகளில் பல புதிய விஷயங்களை கற்றுத்தருகிறது. அவை என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

உங்களுடைய முதல் பிரசவத்தில் பார்க்கும் புத்தகங்கள், வலைத்தளங்கள் என பலவற்றில் உங்கள் கவனமானது செல்ல, குழந்தை பிறப்பு பற்றிய பல தகவலையும் நீங்கள் தெரிந்துக்கொள்ளக்கூடும். ஆனால், இரண்டாவது பிரசவத்தின் போது இந்த நிலை என்பது குறைகிறது. நீங்கள் உங்களுடைய முதல் குழந்தையை கவனிக்க தொடங்க, இரண்டாவது பிரசவத்தின் போது புத்தகம் படித்து குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்வது என்பது குறைகிறது. இதற்கு காரணம், முதல் பிரசவத்தில் கிடைக்கும் அனுபவமும் கூட என நாம் சொல்லலாம்.

முதல் பிரசவத்தில் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்கும் நீங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடவும் செய்வீர்கள். ஓர் உதாரணத்திற்கு, துரித உணவுகள், கறி, அசைவ உணவை தவிர்த்து உங்கள் குழந்தையின் நலன் கருதி ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள விரும்புவீர்கள். ஆனால், இரண்டாவது பிரசவம் என வரும்போது உணவு விஷயத்தில் இருக்கக்கூடிய பயம் குறைந்து தேவையானவற்றை தேடி சென்று நாம் சாப்பிட செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

முதல் பிரசவம் என்பது நம் வீட்டிற்கு வரப்போகும் குழந்தையை வரவேற்பதில் மிகவும் ஆர்வத்துடன் நாம் இருக்கக்கூடிய ஒன்றாகும். அதனால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்வதில் தொடங்கி, குழந்தை பிறந்த செய்தியை தெரிவிப்பது வரை மிகவும் ஸ்பெஷலாக அனைத்தையும் செய்வீர்கள். ஆனால், இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும்போது இவற்றை நாம் செய்ய முன்வருவதில்லை. இது தான் குழந்தையின் பிறப்பின் போது கூட ஒரு சில வீட்டில் தொடர நேர்கிறது.

முதல் பிரசவத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் பெரிதும் பதட்டத்துடன் பயந்து இருப்பீர்கள். இதற்கு காரணம் ஒரு சில தவறான அறிவுரைகளும் கூட… ஆனால், இரண்டாவது பிரசவத்தின்போது நீங்களே இன்னொருவருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு தெளிவுடன் இருப்பீர்கள். அப்படி இருக்க பயம் மட்டும் எப்படி இருக்கும்? அத்துடன் முதல் முறை பிரசவமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான தைரியத்தையும் ஒரு சில பெண்கள் இரண்டாவது பிரசவத்தின்போது தர மறுப்பதில்லை.

உங்களுடைய முதலாவது பிரசவத்தில் வயிற்றின் அழகில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, நீங்களும் வயிற்றை பிடித்து பார்த்தபடி இருப்பீர்கள். ஆனால், இரண்டாவது பிரசவத்தின்போது இந்த பழக்கம் என்பது உங்களிடம் பெரிதாக தெரியவில்லை.

முதலாவது பிரசவத்தின்போது உங்கள் குழந்தைக்கான பணிவிடைகளை பார்த்து, பார்த்து செய்வீர்கள். உங்கள் வீட்டிற்கு வரப்போகும் புதுக்குழந்தைக்காக பல வித முன்னேற்பாடுகளை செய்தும் வைத்திருப்பீர்கள். ஆனால் இரண்டாவது பிரசவத்தின் போது இப்படி எந்த ஒரு வரவேற்பும் பெரிதாக தரப்படுவதல்ல.

இப்படி முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவம் என்பது மாறி காணப்படுவதால்… உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு என்பதிலும் ஒரு சில மாற்றத்தை காண முடிகிறது. முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை மேல் அதற்கு பிறகு பாசமாக இருந்தாலும், ஏனோ தெரியவில்லை மேல்காணும் ஒருசில விஷயங்கள் போல பலவும் இரண்டாவது பிரசவத்தில் தொலைந்து போகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker