ஆரோக்கியம்

இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்கும் சாந்தி ஆசனம்

இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.

செய்முறை:

விரிப்பில் கிழக்கு திசையில் தலை வைத்து மேற்கில் கால் வைத்து கை கால்களை அகற்றி படுத்துக் கொள்ளவும். தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்துக் கொள்ளவும் கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும். (படத்தை பார்க்கவும்). கண்களை மூடிக் கொள்ளவும். இப்பொழுது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும். அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன். அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணத்தினால் ரிலாக்ஸ் செய்யவும். பின்பு உங்கள் மனதை தொண்டை வெளி சதையில் நிலை நிறுத் தவும். அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.

பின்பு உங்கள் மனதை தோள்பட்டை பகுதியில் நிலைநிறுத்தி அந்த தசைகளிலுள்ள எல்லா டென்ஷனையும் அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன் என்று மனதால் தளர்த்திக் கொண்டே வரவும். பின்பு உங்கள் மனதை இருதயத்தின் வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.

பின்பு உங்கள் மனதை வயிற்று வெளி தசைகளில் நிறுத்தி அதிலுள்ள டென்ஷன், அழுத்தங்களை பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணவும். பின் வலதுகால் வெளி தசைகள், இடதுகால் வெளி தசைகளில் நிலை நிறுத்தி ரிலாக்ஸ் செய்யவும். தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்து அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்யவும்.

இப்பொழுது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்தப் பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம், உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும். மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் உள்ளது. உங்கள் ஆழ் மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.

பின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைராய்டு பகுதியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
பின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும். எனது இதயத்துடிப்பு சீராக இயங்குகின்றது, அந்தப் பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.பின் வயிற்று உள் பகுதியில் சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும். பின் வலதுகால்; உள்பகுதி, இடதுகால் உள்பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.

மூச்சில் கவனம்

இப்பொழுது இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளியிடும் பொழுது நம் உடல், மனதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை செய்யவும்.

இப்பொழுது இயல்பாக நடைபெறும் மூச்சோட்டத்தை மட்டும் கூர்ந்து கவனிக் கவும். மூச்சு இயற்கையாக நடைபெறு கின்றது. அந்த மூச்சு உள் வருவதையும் வெளியே செல்வதையும் மூன்று நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும். பின்பு அவசரப்படாமல் மெதுவாக இரு கால்களையும் சேர்க்கவும். பின் இரு கைகளை மெதுவாக ஒன்று சேர்க்கவும். பின் 10 விநாடிகள் அமைதி யாக இருந்துவிட்டு இடது பக்கம் மெதுவாகத் திரும்பி எழுந்து உட்காரவும்.

பலன்கள்

இந்த சாந்தி ஆசனம் தான் மிகக் கடினமான ஆசனம் என்று யோகிகள் கூறுவார்கள். மற்ற கடினமான ஆசனங்களை செய்துவிடலாம். ஆனால் இதில் உங்கள் மனதை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, மனதிற்கு கட்டளையிட்டு அதனை செயல்படுத்த வேண்டும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது 100 சதவீத மனோலயம் இருக்காது. கவலை வேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முழுமையான பலன் கிட்டும்.மனிதனின் அனைத்து வியாதிக்கும் மன அழுத்தம் கவலை தான் காரணம். மன அழுத்தத்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக இயங்காமல் பல வகையான நோய்கள் வருகின்றது. இந்த சாந்தி ஆசனம் ஒன்று தான் உடல் வெளி தசைகள், உடலுக்குள் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலுள்ள டென்ஷனை வெளியேற்றி மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.

ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும். உடலுக்கு பிராண சக்தி கிடைக்கின்றது. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இயங்கும். நரம்புத் தளர்ச்சி, படபடப்பு நீங்கும். கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். சுறு சுறுப்பாக திகழலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker