சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் தேங்காய் பால்ஸ்
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் – 200 கிராம்
- மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) – 10
- சாக்லேட் பவுடர் – 4 ஸ்பூன்
- வென்னிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன்
- கன்டன்ஸ்டு மில்க் – 150 கிராம்
- பால் – அரை கப்
- வெண்ணெய் – 2 டீஸ்பூன் (உருகியது)
அலங்கரிக்க
- தேங்காய் துருவல் – தேவையான அளவு
- சாக்லேட் தேங்காய் பால்ஸ்
செய்முறை
- மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
- இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.
- ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- பிடித்து வைத்த உருண்டைகளை தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.
- இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.
- அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.
- இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.