சமையல் குறிப்புகள்
வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்
தேவையான பொருட்கள் :
- இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.
- அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.
- வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.
- சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.