பெண்கள் உண்மையான காதலை அறிந்து கொள்வது எப்படி?
ஒவ்வொருவரும் தனக்கான துணையை சீக்கிரமாகவோ அல்லது வேகமாகவோ தேடிக்கொள்வதில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். நீங்கள் காதலிக்காமல் இருக்க உங்களது வெளித்தோற்றமும், குண்டான தோற்றமும் தான் காரணமாக இருந்தால் உங்களது கவலைகளை தூக்கிப்போடுங்கள்! காதல் அழகையும், வடிவத்தையும் தாண்டிய ஒரு விஷயம். அப்படி ஒருவர் உங்களது அழகையும், உடலையும் தான் பார்த்து காதலிக்கிறார் என்றால் அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து சற்றும் கவலை இல்லாமல் தூக்கிப்போடுங்கள்.
கண்டிப்பாக உருவத்தை பார்த்து காதலிக்கும் ஒருவரை உங்களது வாழ்க்கையில் வைத்துக்கொள்ளாதீர்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு வேண்டுமானால் ஒல்லியான உருவம் தேவையாக இருக்கலாம். ஆனால் நீண்ட நாள் நீடித்து இருக்கும் காதலுக்கு புரிதல் ஒன்று மட்டுமே போதுமானது.
நீண்ட நாள் நீடித்து இருக்கும் உறவு என்று வரும் பொழுது அதில் காதல் உணர்வு குறைவாகவும், புரிதல் அதிகமாகவும் இருக்க வேண்டியது அவசியம். காதலும், ஒற்றுமையும் உருவத்தை தாண்டியது. ஒருவேளை உங்களது தோற்றத்தை வைத்து ஒருவர் உங்களை பெருமையாக நினைக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகிவிடுங்கள். அவசரம் வேண்டாம் உங்களுக்கேற்ற துணை உங்களை தேடி வருவார்.
உங்களது தோற்றம் மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை வைத்து உங்களது துணை உங்களை கிண்டல் செய்தால் எப்படி அவருடன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ முடியும்? நிச்சயமாக வாழ முடியாது. நீங்கள் அவரை விட்டு விலகிவிடுவது தான் சரியான முடிவு. உடலை குறைத்துக்கொண்டு அவருடன் வாழலாம் என்று நினைப்பது எல்லாம் முட்டாள் தனமான முடிவாகும்.
நீங்கள் உங்களை விட அழகான ஒருவரை காதலிப்பதை அவரிடம் சொல்லிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அவர் உங்கள் மீது பாவம் பார்த்து ஒரு உதவி செய்வது போல உங்களது காதலை ஏற்றுக்கொண்டால் அது சரிதானா? நிச்சயம் இல்லை..! காதல் பாவம் பார்த்து யார் மீது வரக்கூடாது. காதல் என்ற உன்னதமான உணர்வு எந்த ஒரு காரணத்தையும் அடிப்படையாக கொண்டு வந்தால் அது காதலாக இருக்க முடியாது.
உங்களது காதலர் உங்களது தோற்றத்தை காரணமாக கொண்டு, அவரது நண்பர்களிடம் உங்களை அறிமுகப்படுத்த தயங்கினால் உடனடியாக அந்த உறவில் இருந்து விலகிவிடுங்கள். நீங்கள் அனைவரது கண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோன்ற வேண்டும் என்று என்ன இருக்கிறது…? உங்களை நினைத்து பெருமைப்படுபவர்களை திருமணம் செய்தால் தான் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
உங்களை விட அழகான பெண்களும் அவர் மீது காதல் கொண்டிருப்பதால், அவர் உங்களை விட்டுவிட்டு அடுத்த பெண் பின்னால் செல்கிறாரா? அப்படி என்றால் நீங்கள் அவரை நினைத்து கவலைப்படுவதில் துளியும் பயனில்லை. அவர் உங்களை காதலிக்காமல் போய்விட்டாரே என்பதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். ஏனென்றால் அழகும் இளமையும் என்றுமே நம்முடன் இருந்து விடப்போவதில்லை.. நல்ல மனமும் தூய காதலும் தான் உயிருள்ள வரை உடன் வரும்.
வாழ்க்கையில் ஒரு நபர் உங்களை விட்டு போய்விட்டார் என்பதற்காக வாழ்க்கை ஒன்றும் நின்று போய்விடப்போவதில்லை. அவர் உங்களை அடைய தகுதியில்லாதவர் என நினைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் கொஞ்சம் குண்டாகிவிட்டீர்கள் என்பதற்காக உங்களை வெறுக்கும் ஒருவரை உங்களது வாழ்க்கையில் வைத்துக்கொள்ள வேண்டாம். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. உனக்கு பிடித்ததை சாப்பிட்டு சந்தோஷமா இரு என்று சொல்லும் ஒரு நபரை உங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தால் உங்களது வாழ்க்கையில் இன்பத்திற்கு பஞ்சமே இருக்காது…!