சமையல் குறிப்புகள்
இந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா
தேவையான பொருட்கள்:
- பாஸ்தா – 3 கப்
- வெங்காயம் – 1
- கேரட் – 1
- தக்காளி – 2
- பூண்டு – 2-3 பற்கள்
- இஞ்சி – 1 இன்ச்
- பச்சை மிளகாய் – 1-2
- சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
- வெங்காயம், கொத்தமல்லி, கேரட், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தக்காளியை அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பாஸ்தாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அடுத்து அதில் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
- தக்காளி பச்சை வாசனை போனவுடன் அதில் சாம்பார் பொடி, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி பாஸ்தா ரெடி!!!