புதியவைவீடு-தோட்டம்

மெத்தை வரைக்கும் மூட்டை பூச்சி வந்துடுச்சா, அதை அழிக்க இதை செய்யுங்க!

வெயில் காலம் வந்தாலே பூச்சி வகைகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் மூட்டை பூச்சிகள் படுக்கையில் ஒட்டிகொண்டு இரவு நேரத்தில் உற்சாகாமாக வெளியேறி உடலில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி விடுகிறது. இதை வெளியேற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.வெயில் காலத்தில் இரவு நேர புழுக்கத்தில் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். இந்த நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சிகளின் தொல்லை தூக்கத்தை மேலும் மோசமாக்கிவிடும். அதிகமான அரிப்பை உண்டாக்கும் போது அது தழும்புகளை உண்டாக்கிவிடலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அம்மாக்கள் அச்சத்துடனே இருப்பார்கள்.

என்னதான் வீட்டை பார்த்து பார்த்து வைத்திருந்தாலும் இந்த மூட்டை பூச்சி வகையறாக்களை முழுமையாக விரட்டி அடிக்க சில விஷயங்களை நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டும். அதோடு உங்கள் வீட்டில் மூட்டைபூச்சிகள் அண்டாமல் இருக்கவும் இது உதவும். அது என்னென்ன என்று பார்க்கலாம்.

​மெத்தையில் மூட்டை பூச்சிகள்

இது மெத்தை அல்லது கட்டிலில் இருக்க கூடும். குறிப்பாக பழைய கட்டில்களை வாங்கும் போது இது பரிசாக கட்டிலோடு வரலாம். காலியாக இருந்த வீடுகளில் குடி புகும் போதும் இவை இருந்திருக்கலாம். இந்த சிறிய பூச்சிகள் வீட்டில் ஓட்டைகள் மற்றும் துளைகள் வழியாகவும் வரலாம்.சென்று வரும் போது அசுத்தமான இடங்களில் தங்க நேரிடும் போது, விருந்தினர் வீட்டில் இருந்தால் நம் லக்கேஜ் உடன் லக்கேஜாக வந்துவிடும்.குழாய்களிலும் இவை வரக்கூடும்.

இரவு நேரங்களில் வலி இல்லாத முறையில் இரத்தத்தை உறிஞ்சும். நீண்ட நேரம் இரத்தத்தை உறிஞ்சும் போது அது ஒவ்வாமையை உண்டாக்க செய்யலாம். பெரும்பாலும் ஒவ்வாமையை கொண்டு தான் இந்த மூட்டை பூச்சி இருப்பதை உணர முடியும்.வடுக்கள், கீறல் தொற்று, ஆஸ்துமா எதிர்வினை போன்ற சாத்தியக்கூறுகளை இவை உருவாக்கலாம். இந்த அட்டைப்பூச்சி வெளியெற செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

​படுக்கை விரிப்புகளை சூடேற்றுங்கள்

அணியும் ஆடைகள் முதல் படுக்கையில் இருக்கும் விரிப்புகள் கால் மிதியடிகள் என அனைத்திலுமே வெப்பப்படுத்தும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் அதை வெளியேற்ற முடியும். அதன் முட்டையை ஒழிக்க முடியும்.
தற்போது இந்த வெப்பமூட்டும் கருவி கடைகளில் கிடைக்கிறது. இது முட்டைகள் உட்பட அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டிருப்பது போன்று வடிவமைகப்பட்டுள்ளது.

​வேக்யூம் க்ளீனர்

படுக்கையில் இருக்கும் பூச்சிகளை அகற்ற வேக்யூம் க்ளீனர் பயன்படலாம். வேக்யூம் க்ளீனர் கொண்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அடி விடாமல் சுத்தம் செய்வதன் மூலம் வீட்டை சுத்தப்படுத்திவிடமுடியும்.
அதே நேரம் ஒவ்வொரு அறை ஒரு நாள் என்று ப்ளான் செய்தால் இந்த இடத்திலிருந்து ஏற்கனவே சுத்தம் செய்த இடத்துக்கு எளிதாக இடம் பெயர்ந்துவிடும். ஒரே மூச்சில் சுத்தம் செய்வது பலனளிக்க கூடும். அதே போல் ஒரே ப்ரிஸ்டில் இணைப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

​ஆல்கஹால்

ஆல்கஹாலை நீர் சேர்க்காமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி படுக்கை அறையின் முலை முடுக்கெல்லாம் தெளிக்க செய்யவும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் முட்டை பூச்சி வெளியேறிவிடும். அதெ நேரம் இந்த தெளிப்பானால் துணிகள் மெத்தைகள் கறைபடிகிறதா என்பதையும் கவனித்து கொள்வது நல்லது.
ஆல்கஹால் கரைப்பான் மற்றும் அதன் செல்களை கரைக்க செய்கிறது. இது பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. எனினும் இது குறித்து ஆய்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​எசென்ஷியல் எண்ணெய்

எசென்ஷியல் எண்ணெய் கொண்டு மூட்டை பூச்சிகளை வெளியேற்றிவிடலாம். எலுமிச்சை எண்ணெய் 10 முதல் 15 சொட்டுகள் எடுத்து அதில் 8 அவுன்ஸ் அளவு ஆல்கஹால் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து கலக்கவும். இதை வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் தெளித்து விடவும். இதை தினமும் செய்து வரலாம். மூட்டைபூச்சி வெளியேறும் வரை இதை செய்துவிடலாம்.அத்தியாவசிய என்ணெய் வலுவான நறுமணம் கொண்டது. இது பூச்சிகளை அழிக்கவும் செய்கிறது. வெளியேற்றவும் செய்கிறது. பூச்சிகள் குறித்த இதழ் ஒன்றின் ஆய்வுபடி அத்தியாவசிய எண்ணெய் சார்ந்த பூச்சி கொல்லிகள் மூட்டை பூச்சை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

​வீடு சுத்தம்

மூட்டை பூச்சிகள் வெளியேறும் வரை வீட்டை தினமும் துடைத்து விடுங்கள். படுக்கை அறையில் விரிப்புகளை தினசரி மாற்றுங்கள். வெயிலில் தலையணை, மெத்தை போன்றவற்றை காயவிட்டு எடுங்கள். வீடு தினசரி துடைக்கும் போது கட்டில் மற்றும் தரையில் நறுமண எண்ணெய் சில துளிகள் நீரில் சேர்த்து துடைத்து எடுங்கள்.படுக்கை அறையில் இருக்கும் எல்லா பொருள்களையும் சுத்தமாக துடைத்து எடுங்கள் இதன் மூலம் மூட்டைப்பூச்சிகளின் முட்டைக பெருகாமல் தடுக்கலாம்.

​ஒட்டைகள் விரிசல்களை அடைத்துவிடுங்கள்

வீட்டின் மூலை முடுக்கு பகுதியில் தான் முட்டை பூச்சிகளின் பெருக்கம் அதிகமாக இருக்கும். அதனால் இயன்றவரைவீட்டில் இருக்கும் சிறு விரிசல்கள், ஓட்டைகளை அடைத்து விடுங்கள்.குழாய்களில் கசிவு இருக்கும் இடங்களிலும் அடைப்பை உண்டாக்குவதன் மூலம் இந்த பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker