சமையல் குறிப்புகள்
சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை தட்டை
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – 2 கப்
- அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- வெண்ணெய் – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
- கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
- அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
- அதனை சிறு உருண்டைகளாக்குங்கள்.
- உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த தட்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- சுவையான கோதுமை தட்டை ரெடி.
- இந்த தட்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.