சமையல் குறிப்புகள்

இனிப்பும் புளிப்புமான ரகடா பட்டீஸ்

பேட்டீஸ்:

தேவையான பொருட்கள் :

  • உருளை கிழங்கு – கால் கிலோ
  • பிரட் – 3 ஸ்லைஸ்
  • பூண்டு – சிறிதளவு
  • சோள மாவு – 4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை :

  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
  • பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

ரகடா :

தேவையான பொருட்கள் :

  • பட்டாணி – ஒரு கப்
  • வெங்காயம் – ஒன்று (பெரியது)
  • கரம்மசாலா தூள் – 2 ஸ்பூன்
  • தக்காளி சாஸ் – தேவையான அளவு
  • லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சர்க்கரை – அரை ஸ்பூன்
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 4 பல்
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

  • பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
  • மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
  • இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
  • பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.
  • சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker