சமையல் குறிப்புகள்
தக்காளி தேங்காய்ப்பால் சூப்
தேவையான பொருட்கள்
- தக்காளி – 2,
- தேங்காய்ப்பால் – 2 டீஸ்பூன்,
- வறுத்து பொடித்த தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1/4 டீஸ்பூன்,
- கொத்தமல்லி – சிறிது,
- பிரெட் துண்டுகள் – 2
- உப்பு – தேவையான அளவு.
4
செய்முறை
- பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து வைக்கவும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து விழுதாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.
- சூப்பரான தக்காளி தேங்காய்ப்பால் சூப் ரெடி.