சமையல் குறிப்புகள்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றும் சோயா பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள்
- வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் – 1/2 கப்
- துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- எண்ணெய் – அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
- கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
- சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
- ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
- சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.