தாய்மை-குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் போது செய்யும் தவறுகள்

குழந்தைகளை எப்போதும் சுத்தப்படுவது என்பது மிக அவசியமான ஒன்றாகும். என்னதான் குழந்தையை சுத்தப்படுத்துவது அவசியம் என்றாலும், சரியான முறையில் அதை செய்கிறோமா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

1 குழந்தை பிறந்தவுடன் அதன் பெற்றோர் அதை குளிக்க வைத்து சுத்தப்படுத்திவிடுவார்கள். அதை செய்யும் முன் உங்கள் குழந்தையை கவனியுங்கள், மெழுகு போன்ற வெண்மையான ஒரு பொருள் உங்கள் குழந்தையின் மேல் இருந்தால், அது உங்கள் குழந்தையின் சருமத்திற்கு நன்மை பயக்கும். இதை மனதில் கொண்டு, உங்கள் குழந்தையின் முதல் குளியலை 6 மணி நேரம் தாமதப்படுத்துங்கள். இந்த மெழுகு போன்ற பொருள் உங்கள் குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு 2 மணி நேரத்திற்கு இயற்கையான பாதுகாப்பு கவசமாக அமையும்.



2 உங்கள் குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் நீங்கள் அதை துணி கொண்டு மூடி வைத்திருப்பீர்கள். இரவு நேரங்களில் தொடர்ந்து குழந்தையை குளிக்க வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை குழந்தையை இரவில் குளிக்க வைக்கலாம். அதுவே உங்கள் குழந்தையை புத்துணர்வுடனும், சுத்தமாகவும் வைக்க போதுமானது. குழந்தையின் நாப்கின்களை மீறியும் அசுத்தப்படும் போது, குளிக்க வைப்பது அவசியமாகும்.

3 அதிகப்படியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எளிமையாக மற்றும் மென்மையாக சுத்தப்படுத்துவதையே விரும்புகின்றனர். அவர்கள் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் போது, குழந்தைகளுக்கான குளியல் பொருள்கள், சுத்தப்படுத்தும் தயாரிப்புகள், மசாஜ் செய்ய உதவும் தயாரிப்புகள் போன்ற பல குழந்தைகளுக்கான தயாரிப்புகளால் கவரப்படுகின்றனர். இது போன்று பல தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கும் போது, அதில் இருக்கும் அதிகப்படியான இரசாயனத்தால் குழந்தையின் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும். அதுபோல் வேதனையை விலை கொடுத்து வாங்குவதை விட, ஏதும் செய்யாமல் இருப்பதே மேல்.

4 உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால், அதிக வெப்பமான நீரோ அல்லது குளிர்ச்சியான நீரோ அவர்களின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அது உங்கள் குழந்தைக்கு அரிப்பு போன்று அலர்ஜியை கூட ஏற்படுத்தலாம். எனவே உங்கள் குழந்தையை குளிக்க வைக்கும் நீர் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.

5 எந்த ஒரு அனுபவம் உள்ள பெற்றோரும் சொல்வது, குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்து, தானாக விழும் வரை அதை கவனமாக கையாள வேண்டும் என்பதே. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைப்பின்படி, காய்ந்து போன பகுதியை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மற்ற பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதிலிருந்து ஏதும் சுரந்தால், துணியை தண்ணீரில் நனைத்து மெதுவாக துடைக்கலாம்.

பத்து மாதம் பல வலிகளை கடந்து குழந்தை பெற்று பேணி காக்கும் நாம் செய்யும் சிறு தவறு கூட குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுத்தப்படுத்தும் போதும், கையாளும் போதும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker