சமையல் குறிப்புகள்
உடல் எடையை குறைக்கும் சாலட்
தேவையான பொருட்கள் :
- ஆப்பிள், பேரீச்சை பழம், மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை – 2 கப்
- பால் – 2 கப்
- ஓட்ஸ் – கால் கப்
- உப்பு – ஒரு சிட்டிகை
- தேன் – 2 மேசைக்கரண்டி
- உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
- பழங்களை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும்போது ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.
- ஓட்ஸ் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.
- இந்த ஓட்ஸ் கலவையில் பழங்கள், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அதை கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.
- * இதில் விரும்பிய பழங்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.