ஃபேஷன்

நவநாகரிக தோற்றம் தரும் பலாஸ்ஸோ பேண்ட்கள்

அறிமுகமாகிப் பல ஆண்டுகளானாலும் இன்றும் ட்ரெண்டியாக பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுபவை என்றால் அது நிச்சயமாக பலாஸ்ஸோ பேன்ட்களாகத்தான் இருக்க முடியும்.

இவ்வகைப் பேண்ட்கள் அணிவதற்கு எளிதாக, நம் உருவத்தை மெல்லியதாகக் காட்டுவதோடு லாங் ஸ்கர்ட் அணிந்தால் எப்படிச் சுதந்திரமாக உணர்வோமோ அப்படிப்பட்ட உணர்வை தருகின்றது. பெண்கள் இதை பெரிதும் விரும்பி அணிய இது தவிர வேறு ஏதாவது காரணம் வேண்டுமா என்ன?

முதன்முதலில் ப்ளெயின் கலரில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை பேண்ட்கள் நைலான், ஜெர்ஸி, லினென் மற்றும் காட்டன் துணிகளில் கிடைத்து வந்தன. இப்பொழுது இவ்வகை பலாஸ்ஸோ பேண்ட்களில் எக்கச்சக்கமான டிசைன்கள் வந்துவிட்டன.ஃப்ளோரல் மற்றும் ஸ்ட்ரைப்டு பலாஸ்ஸோ பேண்ட்களை அணியும்போது மேலே அணிந்து கொள்ளும் டாப்பானது ப்ளெயின் கலரில் பிட்டாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். சில நேரங்ளில் மேலே அணியும் டாப்பை டன்இன் செய்தும் அணியலாம். உயரம் குறைவான பெண்கள் இப்பேண்ட்களை அணிந்துகொள்ளும் பொழுது ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்தால் அவர்களை ஒல்லியாகவும், உயரமாகவும் காட்டும்.

லேயர்ட் பலாஸ்ஸோ:- இரண்டு லேயர்களாக துணிகளை தைத்து தைக்கப்பட்டிருக்கும் இவ்வகை பலாஸ்ஸோ பேண்ட்கள் க்ராப் டாப் மற்றும் ஷார்ட் குர்திகளுடன் அணிய ஏற்றவை.

டெனிம் பலாஸ்ஸோ:- அணிவதற்கு மிகவும் சவுகரியமாக டெனிம் துணிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை பலாஸ்ஸோக்கள் வெள்ளை மற்றும் பிரிண்ட் டாப்புகளுடன் அணியும்பொழுது அவை மிகவும் அழகான தோற்றத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

ஸ்கர்ட் லுக் பலாஸ்ஸோ:- இவ்வகை பலாஸ்ஸோக்கள் சாதாரண பலாஸ்ஸோக்களை விட மிகவும் அகலமாக பார்ப்பதற்கு பாவாடை அணிந்திருப்பதை போன்ற தோற்றத்தை தரும். ஸ்ட்ரெய்ட் குர்திஸ், ஸ்லிட் குர்திஸ் மற்றும் கராப் டாப்புகளுடன் இவற்றை அணியலாம்.

ஃபார்மல் பலாஸ்ஸோ:- இவ்வகை பலாஸ்ஸோக்கள் அதிக ஃப்ளேர் இல்லாமல் சாதாரண பேண்ட்களை போல அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏதுவானவை.

டியர்டு பலாஸ்ஸோ:- கீழிருந்து முட்டிக்கால் வரை பலவித டிசைன்களுடன் அறிமுகமாகியிருக்கும் இவற்றை லாங் டாப் மற்றும் முட்டிக்கால்வரை நீண்டிருக்கும் குர்திகளுடன் அணியலாம்.டை சைடு பலாஸ்ஸோ:- உள்ளே பேன்ட் மேலே பார்ப்பதற்கு வேஷ்டி அணிந்தது போன்ற தோற்றத்தை தருபவை இவை. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு எம்ப்ராய்டரி செய்யப்பட்ட டாப்புகளுடன் அணிந்தால் நிச்சயம் அனைவரின் கவனத்தையும் கவர்பவராக நாம் இருப்போம்.

க்யுலோட்ஸ் பலாஸ்ஸோ:- இவ்வகை பலாஸ்ஸோக்கள் உயரம் குறைவாக முக்கால் கால்வரை மட்டுமே உள்ளன. இவை புதுவிதமான ட்ரெண்டியான தோற்றத்தை தருகின்றன என்றே சொல்லலாம். இவற்றை லாங் குர்திகளுடன் அணியக்கூடாது.

பார்டர்டு பலாஸ்ஸோ:- பலாஸ்ஸோ பேண்ட்களின் கீழ்ப்பகுதியில் பார்டர்கள் வைத்து தைக்கப்பட்டு வந்திருக்கும் இவை அனைத்து வயது பெண்களாலும் விரும்பி அணியப்படுகிறது. கண்கவர் வண்ணங்களில் கான்ட் ராஸ்ட் பார்டர்கள், கலம்காரி பார்ட்கள் என்று காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்விதமாக இருப்பவை இவ்வகை பலாஸ்ஸோக்கள்.

ஃப்ரன்ட் மற்றும் பேக் ரேப் பலாஸ்ஸோ, டக் பலாஸ்ஸோ, ப்ளட்டட் பலாஸ்ஸோ, அடுக்கு பலாஸ்ஸோ, ஹை ஸ்லிட் பலாஸ்ஸோ, ஸைட் ஸ்லிட் பலாஸ்ஸோ, டோத்தி பலாஸ்ஸோ, பூட் கட் பலாஸ்ஸோ, ஃப்ளேர்டு பலாஸ்ஸோ, டபுள் லேயர்டு பலாஸ்ஸோ, ஃபோல்டு ஓவர் பலாஸ்ஸோ, பெல்ட் பலாஸ்ஸோ, ஸ்ட்ரெய்ட் பலாஸ்ஸோ, ஃப்ரன்ட் ஸ்லிட் பலாஸ்ஸோ, டாஸல் பலாஸ்ஸோ, பாக்கெட் பலாஸ்ஸோ என பலவகைகளை கொண்டிருக்கும் இவ்வகை பேண்ட்களை பெண்கள் விரும்பாமல் இருக்க முடியாது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker