சமையல் குறிப்புகள்
இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – 2 கப்
- மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.
- பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.
- சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
- ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.