சமையல் குறிப்புகள்

சத்தான டிபன் கம்பு – பப்பாளி அடை

தேவையான பொருட்கள்:

  • பப்பாளிக்காய் துருவல் – அரை கப்,
  • தேங்காய் துருவல் – கால் கப்,
  • வெங்காயம் – 2,
  • கம்பு மாவு – 2 கப்,
  • அரிசிமாவு – கால் கப்,
  • பச்சை மிளகாய் – 2,
  • உப்பு – தேவையான அளவு,
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு.




அரைப்பதற்கு:

  • துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி,
  • முளைகட்டிய சுண்டல் – ஒரு கைப்பிடி,
  • இஞ்சி – சிறுதுண்டு,
  • பட்டை, கிராம்பு – 2,
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்,
  • மிளகு – ஒரு டீஸ்பூன்.

 



செய்முறை:

  • வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளி துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, அரிசி மாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
  • சுவையான கம்பு – பப்பாளி அடை ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker