இப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்
எல்லாப்பெண்களும், ஆண்கள் தங்களை கையில் வைத்து தாங்க வேண்டும் என்றும், கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
ஆண் தன்னை புரிந்து கொண்டு, தனக்கு மதிப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
பெண்கள் எவ்வளவு தைரியமாக இருந்தாலும், ஆண் தனக்கு பாதுகாப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பிரச்னை என்றால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.
எப்போதும் தன் நினைப்பிலேயே இருக்கும் கணவனை மனைவி அதிகம் விரும்புகிறாள்.
அழகைவிட தைரியமான ஆண்களை தான் பெண்கள் விரும்புகின்றனர். அழகு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்!
நேர்மையான ஆண்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. எதையும் நேருக்கு நேர் பேசும், எதிர்கொள்ளும் ஆண்களை மிகவும் விரும்புகின்றனர்.
பெண்களை பாராட்டும், உற்சாகப்படுத்தும் ஆண்களை பெண்கள் ரொம்பவே ரசிக்கின்றனர்.
சிறு தொடுதல், கொஞ்சல், முத்தம் என பாசமுடன் இருக்கும் ஆண்களை பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர்.