சமையல் குறிப்புகள்

தக்காளி பன்னீர் சாண்ட்விச்

தேவையான பொருட்கள் :

  • கோதுமை பிரெட் – 6 துண்டுகள்
  • வெண்ணெய் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1
  • குடைமிளகாய் – 1
  • வெங்காயம் – 1
  • பன்னீர் – 1/2 கப்
  • மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.
  • பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.
  • இப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker