சமையல் குறிப்புகள்
தித்திப்பான பீட்ரூட் அல்வா
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் – 4
- பால் – 2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – சிறிது
- உலர் திராட்சை – சிறிது
- பாதாம் – சிறிது
- கண்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
செய்முறை :
- முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
- பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.
- பின்னர் அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா ரெடி.