சமையல் குறிப்புகள்
பாதாம் – செலரி சூப்
தேவையான பொருட்கள் :
- பாதாம் – 50 கிராம்,
- வெங்காயம் – ஒன்று,
- செலரி, பாஸில் இலை – சிறிதளவு,
- காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர்,
- பால் – ஒரு கப்,
- பாதாம் – சிறிதளவு (அலங்கரிக்க),
- மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.
- அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- அரைத்த அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
- கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.
- இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.
- சூப்பரான பாதாம் – செலரி சூப் ரெடி.