ஆரோக்கியம்

முத்திரை செய்வோம்- மாத்திரை தவிர்ப்போம்

ஒருவரைப் பார்த்து அவர் யோகக்காரர் என்று இன்று ஒருவர் கூறினால், அவரிடம் நிறைய சொத்து உள்ளது, பெரிய வீடு, கார் உள்ளது, கையில் விலை உயர்ந்த செல்போன் உள்ளது, இதனால் அவர் யோகக்காரர் என்று கூறுவது வழக்கம். உண்மையில் யாருடைய உடல் இயக்கம் சரியாக இருக்கின்றதோ, யாருடைய உடலில் எந்த நோயும் இல்லையோ, யார் மன அமைதியுடன் வாழ்கின்றார்களோ, அவர்களே யோகக்காரர் என்பதை நாம் உணர வேண்டும்.



பொதுவாக மனிதர்கள், வாயில் லாமல் உண்ண முடியுமா? நோய் இல்லாமல் வாழ முடியுமா? என்றுதான் கூறுவர். நிச்சயமாக நோயில்லாமல் வாழலாம். அதுதான் யோகக்கலை. யோகா என்றால் கை கால்களை வளைப்பதுதானே என்று சாதாரணமாக எண்ணுவது தவறு. இது உடலையும், மனதையும் நம்முள் உள்ள ஆத்மாவுடன் (இயற்கையுடன்) இணைக்கிறது.

இப்பொழுது ஒன்று கூறுகிறேன் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாம் அனை வரும் யோகாசனம், பிராணாயாமம், முத்திரை, தியானம் ஆகியவற்றை தாயின் கருப்பையில் இருக்கும் பொழுதே செய்துள்ளோம். இக்கலை நமக்கு புதிதல்ல, ஆம் தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவரும் பொழுது முதலில் தலை வெளிவரும். பின்புதான் கால் வரும். தலைகீழாக நிற்பது “சிரசாசனம்”. நாம் தாயின் வயிற்றில் சிரசாசனம் செய்துதான் வெளி வருகிறோம்.

குழந்தை வெளி வந்தவுடன் நேராக படுக்க வைக்கிறோம். அது ஒரு காலை ஒரு அடி உயர்த்தும். பின் அடுத்த காலை ஒரு அடி உயர்த்தும். பின் இரு கால்களையும் ஒரு அடி உயர்த்தும். இது “அர்த்த ஹாலாசனம்”.

பின்னர் குழந்தை குப்புறப்படுத்து இரு கைகளையும் தரையில் ஊன்றி கழுத்தை மேல் நோக்கி பார்க்கும். இது “புஜங்காசனம்”.



பின் குழந்தை இரு கால்களையும் மடக்கி அமரும். இது வஜ்ராசனம்”.
பின் மெதுவாக எழுந்து நிற்க முயற்சிக்கும். அதற்கு இரு கைகளையும் முன்னே நீட்டும். பாதி எழுந்து நிற்கும். இது “உட்கட்டாசனம்”.

பின் நின்று கீழே குனிந்து கால் பெருவிரலை தொடும். இது “பாதஹஸ்த ஆசனம்”.

குழந்தை தூங்கும் பொழுது இரு கைவிரல் களைப் பார்த்தால் கட்டை விரலை உள்ளங்கையினுள் மடக்கி மற்ற நான்கு விரல்களை மூடியிருக்கும் இது “ஆதி முத்திரை”.

குழந்தை தாயின் வயிற்றினுள் இருக்கும் பொழுது எண்ணமற்ற மவுனநிலையில் தியான நிலையில் இருக்கின்றது. இப்பொழுது கூறுங்கள்… யோகாசனம், முத்திரை, தியானம் நமக்கு புதிதல்ல. இதை மையப்படுத்திதான் ஆசன வரிசையை அமைத்துள்ளனர்.

1. நேராகப் படுத்து செய்யும் ஆசனங்கள்.
2. குப்புறப்படுத்து செய்யும் ஆசனங்கள்.
3. அமர்ந்து செய்யும் ஆச னங்கள்.
4. நின்று செய்யும் ஆசனங் கள்.
5. முத்திரைகள், மூச்சு பயிற்சி, தியானம்.

யோகாசனங்களை யார் செய்யலாம்?

ஆண்கள், பெண்கள் அனைவரும் பயிலலாம். எட்டு வயதிலிருந்து பயிலலாம். மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். 140 என்றும் யோக சாஸ்திரம் கூறுகின்றது. இன்று 60 வயதானாலே வாழ்ந்தது போதும். உடலில் பல வியாதிகள் வரு கின்றது. வாழப்பிடிக்கவில்லை என்கின்றனர். பயப்படாதீர்கள். யோகக்கலைகளை முறையாகப் பயிலுங்கள். தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் மிகச்சிறப்பாக இயங்கும். உடல் ஆரோக்கியம் கிடைக்கும். உள் அமைதி கிடைக்கும். அவரவர்கள் வயது, உடல்நிலை, வியாதியின் தன்மைக்கு ஏற்ப யோகா சனங்களை முத்திரையை முறைப்படி தக்க யோக வல்லுனரின் மூலம் பயிலுங்கள்.



மனிதனின் குணமும் உள் உறுப்புகளும்

பய உணர்வு இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும். “கோபம்” இருந்தால் கல்லீரல் பாதிக் கப்படும். “மனசஞ்சலம்” இருந்தால் இதயம் பாதிக் கப்படும். “துக்கம், கவலை” இருந்தால் நுரையீரல் பாதிக்கப்படும். “வருத்தம்” இருந்தால் வயிறு ஜீரணம் பாதிக்கப்படும். இந்த உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்.

யோகாசனம் செய்தால் மட்டுமே மனதில் எழும் கோபம், பயம், மனசஞ்சலம், துக்கம், வருத்தத்தை அழித்து அமைதியான மனநிலையை கொடுக்கும். யாருடைய மனம் அமைதியாக உள்ளதோ அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி வராது. எவ்வளவு வயதானாலும் நலமாக வாழலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker