சமையல் குறிப்புகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை லட்டு

தேவையான பொருட்கள் :

  • வறுத்த வேர்க்கடலை – 1 கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • வெல்லம்/கரும்பு சர்க்கரை – 3/4 கப்

 

செய்முறை :

  • முதலில் வறுத்த வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு செய்வதனால் வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்குவது எளிதாக இருக்கும். வறுத்த கடலையை கைகளால் கசக்கினால் ஊதினால் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.
  • தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்(நைசாக வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்).
  • அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.
  • அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!
  • வேர்க்கடலை எண்ணெய் விடும் அதனால் உருண்டைகளாய் உருட்ட வேறு பொருட்கள் தேவை இல்லை..

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker