வாழைப்பழ தேநீர் இதயத்தைப் பாதுகாக்குமா?
Banana tea health benefits recipe in Tamil : பெரும்பாலானோர் வாழைப்பழத்தை முக்கிய உணவாக எடுத்துக்கொள்வார்கள். வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. வாழைப்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தை கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால் நிம்மதியான துாக்கம் கிடைக்கும்.
1. சர்க்கரை:
சர்க்கரையை பெரும்பாலான பானங்களில் சேர்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் தூங்க போகும் தேநீர் குடித்தால் அதில் உள்ள சர்க்கரை, இரவு தூக்கத்தை முற்றிலுமாக கெடுத்து விடும். மேலும் இந்த பழக்கம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். ஆனால் வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கலாம்.
2. உறக்கம்:
ட்ரிப்டோபான், செரோடோனின், டோபாமைன் போன்றவை வாழைப்பழத்தில் இருப்பதால் அது இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை பிரச்னையை குணப்படுத்தும்
வாழைப்பழத்தில் இருக்கும் செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவை தூக்கத்தை மேம்படுத்தக்கூடிய ஹார்மோன்களை தூண்டி ஆழ்ந்த உறக்கத்தை பெற உதவும்.
3. உடல் எடை:
கார்போஹைட்ரேட், க்ளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றன வாழைப்பழத்தில் இருப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன் உடல் எடையும் குறைகிறது.
4. உடல் எதிர்ப்பு சக்தி:
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இருக்கும் டோபாமைன் மற்றும் கேலோகேடசின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமாக உள்ளதால் உடலில் நோய் தொற்று ஏற்படாது.
5. இருதய ஆரோக்கியம்:
வாழைப்பழத்தில் கேடெசின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் இருதய நோய்கள் ஏற்படாது. வாழைப்பழத்தில் பொட்டாஷியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாதுக்கள், இருதயம் சீராக வேலை செய்ய உதவும்.
வாழைப்பழ தேநீர் தயாரிக்க:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அது கொதித்ததுடன், தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிய வாழைப்பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு மேலும் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். அதில் பட்டை தூள் சேர்த்து பின் வடிகட்டி சூடாக பருகலாம்.