சமையல் குறிப்புகள்
பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- மட்டன் – 1 கிலோ
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
அரைக்க
- சிறிய வெங்காயம் – 10
- பூண்டு – 15 பற்கள்
- பச்சை மிளகாய் – 4
- சிவப்பு மிளகாய் – 4
- தேங்காய் – 2 தேக்கரண்டி (துருவியது )
- மல்லி தூள் – 1 தேக்கரண்டி
- புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
- இஞ்சி – சிறிய துண்டு
சமையலுக்காக
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- வெங்காயம் – 4
- தக்காளி – 3
- பாஸ்மதி அரிசி – 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
- நீர்த்த தேங்காய் பால் – 3 கப்
- புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
- பட்டை – 1
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 4
- பிரியாணி இலை – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிவற்றை சேர்த்து ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ள வேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
- வெங்காயம் சிவந்த பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கிளறி விடவும்.
- இந்த நிலையில் உப்பு, தண்ணீர், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்து பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும்.
- அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.
- சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்