சமையல் குறிப்புகள்
பர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்:
- நூடுல்ஸ் – 200 கிராம்
- பூண்டு – 10
- பெரிய வெங்காயம் – 2
- முட்டைக்கோஸ் – ஒரு கப்
- கேரட் – ஒரு கப்
- எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
- புளி கரைசல் – ஒரு டேபிள் ஸ்பூன்
- கேசரி பவுடர் – ஒரு சிட்டகை
- காய்ந்த மிளகாய் துகள் – தேவையான அளவு
- தட்டை – 2
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
- முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
- சுவையான அத்தோ ரெடி..!