காதலித்து கல்யாணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் செய்தவர்களாக இருந்தாலும் சரி தொட்டுத் தாலிக் கட்டியபின் கணவர்மார்கள் செய்யக்கூடிய அட்டூழியங்களை சொல்லி மாளாது. அதில் ஒரு பகுதிதான் வீட்டிற்கு தினந்தோறும் தாமதமாக வருவது. கல்யாணம் ஒரு சில மாதம் வரைக்கும் பொட்டிப்பாம்பாக நேரத்திற்கு மணி அடித்தாற் போல் வரும் உங்கள் கணவர் அதன்பின் நேரத்திற்கு வருவதில்லை என்றால் ஏதோ கல்யாணம் ஆன புதிது தாம்பத்தியத்திற்காகத் புதிதாக கல்யாணம் ஆன போது வீட்டிற்கு நேரத்திற்கு வருகிறார் என்று எண்ணி உங்கள் கணவரின் பொய்களுக்கு நீங்களே ஆதரவாக இருந்து விடாதீர்கள்.
உங்கள் கணவருக்கு பழைய காதல் இருந்திருக்கலாம். அல்லது நீங்கள் வந்த பிறகு புதியதாக காதல் மலர்ந்திருக்கலாம்.இப்படி எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். உங்களின் நம்பிக்கையே அவர்களது சொத்து. அதனால் உங்கள் கணவன் சொல்வதையெல்லாம் நம்பினீர்கள் என்றால் உங்கள் கதி அதோகதி தான்.
வந்தவுடனே தூங்கி விடுகிறாரா?
சரி வேளைப் பழு காரணமாக தாமதமாக வருகிறோம் என்றால் குழந்தைகள் உள்ளிட்ட யாரிடமும் நேரம் செலவிடாமல் உறங்கச் சென்று விடுகிறார் என்றால் நீங்கள் கட்டாயம் அவரிடம் கேட்டே ஆக வேண்டும் தாமதமாக வருவதற்கான காரணங்கள் என்னவென்று நிச்சயம் வேலைப்பளு என்று தான் அவரது பதில் இருக்கும். தொடர்ந்து அந்த தருணமே பேசுவது சண்டையில் போய் முடியும். எனவே கொஞ்சம் பொறுமையாக இருந்து காய் நகர்த்த ஆரம்பியுங்கள்.
வேலை ஒரு காரணமா ?
வேலைப்பளு ஒரு காரணமாக இருந்தால் கட்டாயம் மனைவியுடனும் , குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட அவர் முயற்சிப்பார். . ஒரு வேளை உண்மையாகவே வேளைப்பழு காரணமாக இருந்தால் அவருக்கு ஒத்துழையுங்கள். இயந்திரம் போல் சுழன்ற அவருக்கு நிச்சயம் உளவியல் ரீதியாக ஓய்வு தேவை. அது தன் குடும்பத்திடம் இருந்து தான் கிடைக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். உடல் அசதி என்றால் கூட குறைந்த பட்சம் தன் குழந்தைக்கு ஒரு செல்ல முத்தத்தையோ, அல்லது தலைக் கோதலையோ பரிசாகத் தந்தபின் தான் உறங்கச் செல்வார். இதெல்லாம் நடக்கவில்லை என்றால் அவர் ஏதோ பொய் சொல்கிறார் என்று தான் அர்த்தம். அது பின்வரும் காரணங்களில் ஒன்றாகத் தான் இருக்கும்
நண்பர்கள்
பிறந்ததிலிருந்தே நண்பர்களை மட்டுமே உலகம் என வாழ்ந்த கணவன் மார்கள் அதிகமாக இருப்பார்கள். ஒரு வேளை நல்ல நண்பர்களாக இருந்தால் தங்கச்சி தனியாக இருப்பா நீ சீக்கிரம் கிளம்புடா என நிச்சயம் ஆறுதல் கூறுபவனாக இருப்பான். வீட்டுக்குத் தானடா போய்க்கலாம். இரு எனக் கூறும் நண்பன் சூழ்நிலைவாத நண்பனாகத் தான் இருக்க முடியும். இல்லை உண்மையாகவே எங்கேயும் செல்ல வேண்டுமானால் தங்கச்சியிடம் நான் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன் என குறைந்தபட்சம் மனைவிக்கு நீ என்ன செய்கிறாய் என்ற தகவலை சொல்லும் நண்பனாக இருந்தால் விட்டு விடுங்கள் இல்லாவிட்டால் களையெடுந்து விடுங்கள்.
பெண்கள் காரணமாக இருக்கலாம்
உங்கள் கணவருக்கு பெண்கள் மீது அதீத ஈடுபாடு இருக்கிறதா என்பதை உங்கள் அவரை வெளியில் அழைத்துச் சென்று அவருக்கே தெரியாமல் பார்த்தாலே தெரியும். ஒருவேளை அவர் அப்படி பெண்கள் விஷயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் கட்ட்டிலில் தகுந்த பதிலடி கொடுத்து விடுங்கள். அப்படிப்பட்டவர் தாமதமாக வருகிறார் என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வருகிறார் என்று தான் அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் அவரைக் குற்றவாளியாக்கி கேள்வி கேட்பதில் எந்த தீர்வையும் பெற்று விட முடியாது. மாறாக இல்லற வாழ்வியலின் மூலமாகத் தான் சுமூகமான வாழ்க்கையை உங்களால் நகர்த்த முடியும்.
உங்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள
நேற்றிரவு நடந்த பஞ்சாயத்து இன்று தொடருமானல் அவர் கண்டிப்பாக வீட்டிற்கு வருவதை நிச்சயம் விரும்பமாட்டார். அல்லது உங்களிடம் அவருக்கு பிடிக்காத விசயம் ஏதாவது இருக்கலாம் இல்லையென்றால் உங்களையே அவருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் எனவே கவனமாக இருங்கள். எதுவாக இருந்தாலும் நேரிடையாக கேட்டு உடனடித் தீர்வு எட்டப்படுவது உங்கள் இருவருக்குமான வாழ்க்கைக்கும் நல்லதாக இருக்கும்.
குடும்ப சுமையை அவருக்கு புளித்திருக்கலாம்
குடும்ப சுமைகள் என்பது பணமாக மட்டும் இருக்க வேண்டும் என எந்த விதமான நிச்சயமும் இல்லை. ஆனால் அதையும் தாண்டி நிறைய இருக்கின்றன. அது எல்லாம் அவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். அப்போது அலுவலகம் முடிந்தாலும் வீட்டிற்கு போக வேண்டுமா என்ற கேள்வி அவர் மனதில் எழுந்து தனியாக ஊர் சுத்துவார். குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பண்ணலாமா என்று நீங்கள் கேட்கலாம். தனியாக அழைத்து மனம் விட்டு பேசுங்கள். அதிலிருந்து அவர் வெளிவர உதவுங்கள். இது மிகச் சிறிய பிரச்சினை தான் இதிலிருந்து வெளிக் கொண்டு வர முடியும் என்பதால் மனைவிகள் குழந்தைகளுக்காவது உள்ளன்போடு இதைச் செய்தால் இல்லறம் சிறக்கும்.
வேறு ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்
தாமதமாக வந்துவிட்டு உங்களிடம் பேசுவதை மட்டும் தவிர்க்கிறாரா? குழந்தைகள் போனை பயன்படுத்தினால் கூட கோவப்படுகிறாரா? இதுவரை இல்லாத ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வரும் போது அதை சொல்ல மறுக்கிறாரா? விடுமுறை நாட்களில் கட்டாயம் வீட்டை தவிர்க்கிறாரா ? நிச்சயம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார் என்று தான் அர்த்தம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் திருந்தி உங்களிடமே வருவார்கள். ஆனால் அதுவரை உங்களால் உளவியல் ரீதியாக பாதிக்காமல் இருக்க முடியுமா என்று பாருங்கள் இல்லையென்றால் குறைந்த பட்சம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனித்திருங்கள் அது தான் குழந்தை வாழ்வுக்கு நல்லதாக இருக்கும்.”