சமையல் குறிப்புகள்

சத்தான ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்

தேவையான பொருட்கள் :

  • ராஜ்மா – 2 கப்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
  • கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
  • ஓமம் – ஒரு டீஸ்பூன்,
  • வெங்காயம் – 1
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
  • வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் – அரை கப்,
  • எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
  • பொடித்த முந்திரி – அரை கப்,
  • வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
  • புதினா – சிறிதளவு
  • பிரெட் கிரம்ப்ஸ் – ஒரு கப்
  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு,




செய்முறை :

  • வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
  • ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.
  • இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker