சமையல் குறிப்புகள்

சத்தான வெஜிடபிள் அரிசி ரொட்டி

தேவையான பொருட்கள் :

  • அரிசி மாவு – 2 கப்,
  • கேரட் – 1
  • கோஸ் – சிறிய துண்டு
  • தேங்காய் – 3 பத்தை,
  • வெள்ளரிக்காய் – பாதி,
  • வெங்காயம் – 1,
  • பச்சை மிளகாய் – 3,
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து,
  • சீரகம் – 1 டீஸ்பூன்,
  • எண்ணெய் – தேவையான அளவு,
  • சீரகப் பொடி – 1 டீஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு,




செய்முறை :

  • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் கேரட், கோஸ், தேங்காய், வெள்ளரிக்காய், சீரகம், சீரகப் பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் தேவையான அளவு நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாகத் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
  • சத்தான சுவையான வெஜிடபிள் அரிசி ரொட்டி ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker