சமையல் குறிப்புகள்

சத்தான டிபன் வெஜிடபிள் சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – இரண்டு கப்,
  • கேரட் – 1,
  • கோஸ் – சிறிய துண்டு,
  • வெங்காயம் – 1,
  • துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 2,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.




செய்முறை:

  • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
  • கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சத்தான சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker