சருமத்தை பொலிவாக்கும் சந்தனம் பேஸ் பேக்
சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
இக்காலக்கட்ட பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வறண்டு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து எளிதில் விடுபடுவதற்கு சந்தனம் பெரும் உதவியாக உள்ளது.
அதிலும் சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். அந்தவகையில் வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என இங்கு பார்ப்போம்.
* சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.
* கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.
* சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.
* பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள பாக்டீரியல் தன்மை, பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும்.
* சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதிலும் இதை தினமும் முகத்திற்கு போட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
* சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சந்தனப் பொடியுடன், கடலை மாவை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, 20-30 நிமிடம் கழித்து தேய்த்து கழுவ, முகம் அழகாக ஜொலிக்கும்