ஆரோக்கியம்மருத்துவம்

அப்பெண்டிக்ஸ் நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறையும்…

அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி பிரச்சனை எதனால் வருகிறது? எம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் மற்றும் சிகிச்சை முறையை தெரிந்து கொள்ளலாம்.

 

அப்பெண்டிக்ஸில் பொதுவாக சீழ்பிடிப்பதால் வரும் நோய் மற்றும் கட்டிகள். சீல் பிடிப்பதற்கு காரணம் கிருமி தொற்று, உள் பகுதியில் மலம் அடைத்து கொள்வது, குடல் புழுக்கலால் அடைப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன.

அனைத்து வயதினருக்கும் வரும். பொதுவாக 15-25 வயதினருக்கு அதிகமாக உள்ளது. அறிகுறிகள்- தீடீரென்று வயிற்றின் தொப்புள் பகுதியில் வலி மற்றும் வயிற்றில் வலது கீழ்புறத்தில் வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.



ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்சை அகற்றி விட்டால் பல பின்விளைவுகளை தடுக்கலாம். பின் விளைவுகளில் முக்கியமானது சீழ்பிடித்த அப்பெண்டிக்ஸ் வெடித்து வயிற்றில் சீழ்பரவி ஜன்னி ஏற்படும், அப்பெண்டிக்ஸ் கட்டி உண்டாவது, அப்பெண்டிக்ஸ் சுற்றி சீழ்பிடித்து கொள்வது, குடல் அடைப்பு ஏற்படும் போன்ற பல சிக்கலான பின் விளைவுகள் உண்டாகும். அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று கண்டறிவதற்கு மருத்துவருக்கு உடல் பரிசோதனையும் மற்றும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகளும் போதும்.

அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று அறிந்து கொண்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகி லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து விரைவில் முழுமையாக குணமடைந்து விடலாம். தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தான் பின் விளைவுகள் ஏற்பட்டு லேப்ரோஸ்கோப்பி மூலம் செய்ய முடியாமல் Open Operation செய்து நோயாளியின் உயிரை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்படும். லேப்ரோஸ்கோப்பி என்பது சிறு துவாரத்தின் மூலம் செய்ய கூடிய நவீன அறுவை சிகிச்சை முறையாகும்.



தற்போது அனைத்து ஊர்களிலும் அனைத்து மருத்துவமனைகளிலும் செய்யப்படுகின்றது. இதனால் நோயாளிகள் விரைந்து குணமடைந்து நார்மல் நிலையை அடைய முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker