டிரென்டிங்

சொன்னா நம்ப மாட்டீங்க! வாட்ஸ் அப் உதவியால் 23 கிலோ வரை எடை குறைத்த கணவன் மனைவி!

whatsapp : வாட்ஸ் அப் உதவியால் கணவன் – மனைவி ஜோடி 23 கிலோ வரை எடை குறைத்த சம்பவம் இணையத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப் செயலி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது, மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கிறது, கொலை, கொள்ளை, போன்ற பல குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் வாட்ஸ் அப்பை நாம் எந்த முறையில் பயன்படுத்துகிறோமோ அப்படியே நமக்கு பலன் கிடைக்கும் என்பதை ராஜஸ்தானை சேர்ந்த கணவன் – மனைவி ஜோடி இந்த உலகிற்கு காட்டியுள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த ஆதித்யா – காயத்ரி சர்மா ஜோடிகள் திருமணத்திற்கு பிறகு அதிக எடையுடன் இருந்துள்ளனர். கூகுளில் எடை குறைப்பு வீடியோக்கள் பலவற்றையும் பார்த்து எடை குறைக்க முயற்சியிலும் ஈடுப்பட்டனர்இந்த நேரத்தில் தான் இவர்களது வாட்ஸ் அப் குழுவில் எடை குறைப்பதற்கான போட்டி குறித்து ஃபார்வேட் மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் மற்றொரு வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ளது. இன்னும் ஒரு மாதங்களின் நடைபெறும் எடை குறைப்பு போட்டியில் தங்களது எடையை அதிகப்படியாக குறைக்கும் நபர்களுக்கு 20 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்பட என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துக் கொள்ள ஆதித்யாவும் காயத்ரியும் முடிவு எடுத்துள்ளனர். பரிசுத் தொகையும் வெல்ல வேண்டும், எடையும் குறைக்க வேண்டும் இரண்டுமே நமக்கு அடித்திருக்கும் பலன் என நினைத்தவர்கள் களத்தில் இறங்கினர்.

இருவரும் 1 மாத கடின உழைப்பின் வெற்றி ஆதித்யாவும் காயத்ரியும் 23 கிலோ வரை எடையை குறைத்து பரிசை சொந்தமாக்கியுள்ளனர்.இவர்களது பதிவு சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை போட்டியில் வென்ற பணத்தில் இந்த தம்பதியினர் சொந்தமாக ஜிம் ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker