சருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் அறிகுறியும், தீர்வும்
உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை பெறும். உங்கங் சருமம் முன்பு போல் ஒளிர, உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை.
உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை பெறும். அது முன்பு போல இருக்காது. மென்மையான மிளிரும் சருமம் இருக்காது. முன்பை விட மங்கலாகவும், உலர்ந்தும், கோடுகள் உருவாகி, கரும்புள்ளிகளோடும் காணப்படும். இதெல்லாம் சருமம் முதிர்ச்சியடைவதற்கான அறிகுறிகளே. முன்பு போல் ஒளிர, உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. அதுமட்டுமில்லாமல், இதை எவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ அதுவரை இது நல்லது.
அடிப்படையில் பார்த்தால், உங்கள் சருமம், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய ஃபைபர்களின் வலைப்பின்னல் ஆகும். இந்த புரதங்கள் தான் உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தோல் நீடிக்கப்பட்டால், அதை மீண்டும் அதனுடைய இடத்திற்கே கொண்டு செல்லும் வேலையை இந்த புரதங்கள் செய்கின்றனர். எனினும், வயதாக வயதாக இந்த புரதங்கள் வலுவிழந்து, உங்கள் தோல் தொங்க ஆரம்பித்துவிடும். அவை மெல்லியதாகி கொழுப்பை இழப்பதால், மிருதுவான உணர்வு நமக்கு கிடைப்பதில்லை.
சரும முதிர்வு பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள். இங்கே அதற்கான அறிகுறிகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
1. முகம் பொலிவிழந்து காணப்படுதல்
சருமம் உலர்ந்து இருந்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் முகம், ஒளிரும் தன்மையை இழக்கிறது. மேலும் உங்கள் சருமத்தில் துகள்கள் சேர ஆரம்பித்து உங்கள் சருமம் இறுக்கமடையும். மேலும், உங்கள் சருமத்தில் புதிய செல்களின் பிறப்பு குறைவதால், உங்களின் மேல் அடுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். இதை சரி செய்ய இறந்த செல்களை நீக்கினால் போதும். உங்களுக்கு மிருதுவான சருமம் இருந்தால் உங்களின் தோல் மருத்துவரை அணுகுங்கள் அல்லது இறந்த செல்களை வாரம் ஒரு முறை நீக்க முயற்சி செய்யுங்கள். இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல், சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கினால் உங்கள் சருமம் முன்பு போல் மென்மையாகவும் மிளிரவும் செய்யும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த உங்களின் தோல் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.
2. கரும்புள்ளிகள்
சூரியனில் இருந்து வெளிவரும் UV கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதால், கரும்புள்ளிகள் உண்டாகின்றன. UV கதிர்களால் பாதிப்படைந்த செல்கள் சருமத்தின் மேல் புறத்தில் வரும் போது கரும்புள்ளிகளாக உருவாகின்றன. கரும்புள்ளிகள் ஏற்பட சூரிய கதிர்கள், வீக்கம், தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் முகப்பரு கூட காரணமாக இருக்கலாம். எனவே சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துங்கள். உங்களின் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்துங்கள். மேலும், அது புற ஊதா கதிர்களான UVA மற்றும் UVB ஆகிய இரண்டையும் தடுக்கும் ஆற்றல் கொண்டா SPF15 ஆக இருக்க வேண்டும். கரும்புள்ளிகளை தடுக்க வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த மறக்காதீர்கள்.
3. தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள்
வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் இது முதன்மையானது. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிக நேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப்பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக்கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உணவு பழக்கம் உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பதால் உணவில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.
4. தோல் தளர்வது
வயது ஆக ஆக சருமத்தின் உறுதித்தன்மை வலுவிழந்து, உங்களின் தோல் தளர்வாக தோற்றமளிக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படும். கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகியவை தான் உங்கள் சருமத்திற்கு உறுதியான, மென்மையான, மிளிர்வான கட்டமைப்பை கொடுக்கிறது. 20 வயதிற்கு மேல் இவைகளின் உற்பத்தி குறைவதால், உங்கள் சருமத்தின் உறுதித்தன்மை குறைகிறது, குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களை சுற்றி. இந்த புரதங்களை திரும்ப பெற, நீங்கள் தோல் சார்ந்த பொருட்களை வாங்கும் பொழுது, அதில் நியாசினாமைடு மற்றும் பெப்டைட்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் உங்களின் சருமத்தை வலுவாக வைத்திருக்கும்.